Skip to main content

Posts

Showing posts from September, 2020

கடகம் ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2020 - 2021

  கடக ராசியில் 7 ஆம் வீட்டில் அமர்கின்ற குரு பகவானின் பார்வையானது , 11 ஆம் வீடு , 1 ஆம் வீடு , 3 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 11 ஆம் வீடு என்பது லாபம் , விருப்பங்கள் நிறைவேற்றுதல் ஆகியவற்றையும் , 1 ஆம் வீடு திறமைகள் , குணநலன்கள் , பொது வாழ்க்கை ஆகியவற்றையும் , 3 ஆம் வீடு என்பது தகவல் தொடர்பு , துணிவு , கடவுள் நம்பிக்கை , இளைய சகோதரர்கள் , அண்டை அயலார் ஆகிவற்றைக் குறிக்கும். கடகராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான காலம். செல்வச் செழிப்பில் கொழிக்கின்ற வேளை இது. கணவன் மனைவிடையே மற்றும் நெருக்கமானவர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். தைரியத்தையும் , தன்னம்பிக்கையையும் பெற்று தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். வயதில் மூத்தவர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. நண்பர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள். பயணங்கள் மகிழ்வைத் தரும். விமானப் பயணங்களுக்கு வாய்ப்பில்லை. ஆன்மீக நாட்டம் குறைகின்ற காலமிது. குடும்பம் மற்றும் பொது இடங்களில் விதிமுறைகளை அனுசரித்து நடக்கமாட்டீர்கள். இதனால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சுயக்கட்டுப்பாடு அவசியமாகிறது. கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். வ...